Advertisement

காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்வு

By: vaithegi Thu, 30 Nov 2023 3:00:57 PM

காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்வு

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணத்தினால் காய்கறிகளின் விலை அதிகரிப்பு ... தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் போதுமான காய்கறிகளின் கொள்முதல் இல்லாமலும் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் ஒவ்வொரு காய்கறிகளும் என்னென்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது பற்றிய பட்டியலை காணலாம்.

vegetables price,sale,koyambedu market ,காய்கறிகளின் விலை,விற்பனை, கோயம்பேடு சந்தை

அதாவது, அவரைக்காய் கிலோ ரூ.45-க்கும், நெல்லிக்கனி ரூ.102க்கும், மக்காச்சோளம் ரூ.80க்கும், பீட்ரூட் ரூ.35க்கும், பாகற்காய் ரூ. 40க்கும், கத்தரிக்காய் ரூ.30-க்கும், முட்டைக்கோஸ் ரூ. 10க்கும், குடைமிளகாய் ரூ. 30-க்கும், கேரட் ரூ.30க்கும், காலிஃப்ளவர் ரூ. 30க்கும், கொத்தவரை ரூ. 40-க்கும், தேங்காய் ரூ. 30-க்கும், வெள்ளரிக்காய் ரூ. 20க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து, முருங்கைக்காய் ரூ. 100க்கும், பூண்டு ரூ.180-க்கும், இஞ்சி ரூ.240க்கும், கோவக்காய் ரூ.25க்கும், வெண்டைக்காய் ரூ. 50க்கும், மாங்காய் ரூ. 85க்கும், மரவள்ளிக்கிழங்கு ரூ. 50க்கும், பெரிய வெங்காயம் ரூ. 60க்கும், உருளைக்கிழங்கு ரூ. 33க்கும், முள்ளங்கி ரூ. 20-க்கும், புடலங்காய் ரூ.30க்கும், தக்காளி ரூ. 40-க்கும், வாழைப்பூ ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|