Advertisement

இன்று குறைந்தது தங்கத்தின் விலை

By: vaithegi Thu, 30 Nov 2023 3:47:55 PM

இன்று குறைந்தது தங்கத்தின் விலை

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது ... சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், நேற்று அதிரடியாக அதிகரித்தது.

சென்னையில் நேற்று முன்தினம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 1 சவரன் தங்கம் ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.81.50-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.81,500-க்கும் விற்பனையானது.

gold price,silver,sale ,தங்கத்தின் விலை,வெள்ளி ,விற்பனை


இதையடுத்து நேற்று சவரனுக்கு ரூபாய் 720 ரூபாய் அதிகரித்து, 1 சவரன் தங்கத்தின் விலை 46 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 90 ரூபாய் அதிகரித்து 5870 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,920க்கு விற்பனையாகிறது.சென்னையில் 1 கிராம் தங்கம் ரூ.5 குறைந்து ரூ.5,865க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் கிராம் ரூ.82.20க்கு விற்பனையாகி கொண்டு வருகிறது.

Tags :
|