Advertisement

முதன்முறையாக நேற்று 4 லட்சம் கோடி டாலரை (ரூ.333 லட்சம் கோடி) தொட்டது இந்திய பங்குச் சந்தை

By: vaithegi Thu, 30 Nov 2023 2:36:36 PM

முதன்முறையாக நேற்று 4 லட்சம் கோடி டாலரை (ரூ.333 லட்சம் கோடி) தொட்டது இந்திய பங்குச் சந்தை

இந்தியா: நேற்றைய தினம் இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 1.10 சதவீதம், தேசியப் பங்குச் சந்தை (நிஃப்டி) 1.04 சதவீதம் அதிகரித்தன. இதையடுத்து மும்பைச் சந்தையில் பட்டியலாகியுள்ள நிறுவனங்களின் மொத்த மதிப்பு முதன்முறையாக 4 டிரில்லியன் டாலரைத் தொட்டது.இதனை அடுத்து நேற்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 727 புள்ளிகள் அதிகரித்து 66,901 ஆக நிலைகொண்டது. நிஃப்டி 207 புள்ளிகள் அதிகரித்து 20,096 ஆக ஆனது. கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு நிஃப்டி 20,000-ஐ கடந்து உள்ளது.

இதையடுத்து அதிகபட்சமாக ஆக்ஸிஸ் வங்கி 3.8 சதவீதம், ஹீரோ மோட்டோகார்ப் 3.45 சதவீதம், எம்.எம். 3.39 சதவீதம் உயர்வைக் கண்டன.சர்வதேச அளவில் சந்தை மதிப்பு அடிப்படையில் இந்திய பங்குச் சந்தை 5-வது இடத்தில் உள்ளது.

indian stock exchange,dots,nifty sensex , இந்திய பங்குச் சந்தை,புள்ளிகள் ,நிஃப்டி சென்செக்ஸ் ,


அமெரிக்கா (47 டிரில்லியன் டாலர்), சீனா (9.7 டிரில்லியன் டாலர்), ஜப்பான் (5.9 டிரில்லியன் டாலர்), ஹாங்காங் (4.8 டிரில்லியன் டாலர்) போன்றவை முதல் 4 இடங்களில் உள்ளன.2007-ல் இந்தியப் பங்குச் சந்தை நிறுவனங்களின் மதிப்பு 1 டிரில்லியன் டாலராக இருந்தது. 2017-ம் ஆண்டில் அது 2 டிரில்லியன் டாலராகவும் 2021-ல் 3 டிரில்லியன் டாலராகவும் அதிகரித்தது .

இவ்வாண்டில் மட்டும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனங்களின் மதிப்பு 600 பில்லியன் டாலர் அதிகரித்து உள்ளது.

பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி பொருளாதாரரீதியாக உலகின் 5-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்தது. 2027-ம் ஆண்டு இந்தியா மூன்றாம் இடத்துக்கு முன்னேறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.


Tags :
|