Advertisement

தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 குறைந்தது!

By: Monisha Wed, 07 Oct 2020 2:10:36 PM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 குறைந்தது!

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் தங்கம் விலை 30 ஆயிரத்தில் இருந்து சற்றென 40 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு தற்போது தங்கம் விலை சிறிது சிறிதாக குறைந்து 39 ஆயிரத்திற்கு கீழ் வந்துள்ளது.

இந்நிலையில் தங்கம் விலையில் சில நாட்களாகவே ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த 29-ந் தேதி ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்தை மீண்டும் தாண்டியது. அதன்பிறகு விலையில் குறைந்தும், அதிகரித்தும் வருகிறது.

gold,silver,price,stock exchange,real estate ,தங்கம்,வெள்ளி,விலை,பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட்

நேற்று தங்கம் பவுனுக்கு ரூ.312 உயர்ந்து, ரூ.38,880-க்கு விற்றது. இதனால் தங்கம் விலை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலையில் குறைவு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.38,440-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.4,805 ஆக இருக்கிறது.

தங்கத்தை போலவே இன்று வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.2,400 குறைந்து ரூ.62,900-க்கு விற்கிறது. ஒரு கிராம் வெள்ளி 62.90 ஆக உள்ளது.

Tags :
|
|
|