Advertisement

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது!

By: Monisha Tue, 14 July 2020 1:13:24 PM

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது!

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த மாதம் 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று திடீரென்று தங்கம் விலை எகிறியது. ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 536-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த உயர்வு மூலம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37 ஆயிரத்து 528க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமிற்கு ரூ.15 குறைந்து ரூ.4 ஆயிரத்து 691க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 56 ரூபாய் 50 காசுகளாக விற்பனையாகிறது.

Tags :
|
|
|