Advertisement

தங்கம் விலை பவுனுக்கு 360 ரூபாய் குறைந்தது

By: Monisha Tue, 25 Aug 2020 12:05:55 PM

தங்கம் விலை பவுனுக்கு 360 ரூபாய் குறைந்தது

தங்கம் விலை இன்று காலை பவுனுக்கு 360 ரூபாய் குறைந்து 39,584 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

இதனால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. 30 ஆயிரத்தில் இருந்து சற்றென 40 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு தற்போது எந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்ததோ, அதேபோல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

gold,silver,price,investment,stock market ,தங்கம்,வெள்ளி,விலை,முதலீடு,பங்குச்சந்தை

இன்று காலை பவுனுக்கு 360 ரூபாய் குறைந்து 39,584 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமிற்கு 45 ரூபாய் குறைந்து 4,948 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கடந்த 18 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு 3,776 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல் வெள்ளி விலை 20 காசு குறைந்து 72 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Tags :
|
|
|