Advertisement

தங்கம் ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 624-க்கும் விற்பனை

By: Monisha Sat, 18 July 2020 5:06:44 PM

தங்கம் ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 624-க்கும் விற்பனை

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த மாதம் 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது. இந்த நிலையில் இன்று திடீரென்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 624-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

gold,silver,price,stock exchange,real estate ,தங்கம்,வெள்ளி,விலை,பங்குச்சந்தை,ரியல் எஸ்டேட்

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.4703 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 624க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 39504 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை 80 பைசா உயர்ந்து 57.20ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Tags :
|
|
|