Advertisement

சென்னையில் தங்கம் ஒரு பவுன் ரூ.41,424க்கு விற்பனை

By: Monisha Sat, 01 Aug 2020 12:20:27 PM

சென்னையில் தங்கம் ஒரு பவுன் ரூ.41,424க்கு விற்பனை

தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவில் மீண்டும் கடுமையாக உயர்ந்து புதிய உச்சத்தை சந்தித்து உள்ளது.

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலையில் கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே வருகிறது.

chennai,gold,silver,prices,investment ,சென்னை,தங்கம்,வெள்ளி,விலை,முதலீடு

இந்நிலையில், தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவில் இன்று மீண்டும் கடுமையாக உயர்ந்து புதிய உச்சத்தை சந்தித்து உள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.41,424க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமிற்கு ரூ.28 உயர்ந்து ரூ.5,178க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 40 காசுகள் அதிகரித்து ரூ.72.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|
|
|