Advertisement

மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி தங்கம் விலை; ஒரு பவுன் 41 ஆயிரத்து 496-க்கு விற்பனை

By: Monisha Wed, 19 Aug 2020 10:38:16 AM

மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி தங்கம் விலை; ஒரு பவுன் 41 ஆயிரத்து 496-க்கு விற்பனை

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தங்கம் விலையில் கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன்றன.

தங்கம் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அதன்பிறகு கடந்த 8-ந்தேதியில் இருந்து சரிவை சந்தித்தது. எந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்ததோ, அதேபோல் குறைந்து வந்தது.

கடந்த 14-ந்தேதி சற்று விலை அதிகரித்தது. பின்னர் 3 நாட்களுக்கு விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.200 குறைந்தது.

gold,silver,price,chennai,investment ,தங்கம்,வெள்ளி,விலை,சென்னை,முதலீடு

இந்தநிலையில் மீண்டும் தங்கம் விலை ஏறுமுகத்தை அடையத்தொடங்கி இருக்கிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 75-க்கும், ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.112-ம், பவுனுக்கு ரூ.896-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 187-க்கும், ஒரு பவுன் ரூ.41 ஆயிரத்து 496-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் அதிகரித்தது. கிராமுக்கு 2 ரூபாய் 40 காசும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரத்து 400-ம் உயர்ந்து, ஒரு கிராம் 77 ரூபாய் 10 காசுக்கும், ஒரு கிலோ ரூ.77 ஆயிரத்து 100-க்கும் விற்பனை ஆனது.

Tags :
|
|
|