Advertisement

நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் விலை அறிவிப்பு

By: Monisha Wed, 23 Sept 2020 6:33:10 PM

நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் விலை அறிவிப்பு

ஹெச்எம்டி குளோபல் தனது நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனினை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த மாடல் சர்வதேச வெளியீடு துவங்கி உள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை இதில் 6.81 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.

இத்துடன் 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

hmt global,nokia 8.3,5g,smartphone,price ,ஹெச்எம்டி குளோபல்,நோக்கியா 8.3,5ஜி,ஸ்மார்ட்போன்,விலை

ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஒன் வசதி கொண்டிருக்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் போலார் நைட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை 599 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 51,995 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை 649 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 55,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags :
|