Advertisement

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

By: Sonia Wed, 30 Dec 2020 07:45 AM

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

petrol,diesel,prices,oil company,crude oil ,பெட்ரோல்,டீசல்,விலை,எண்ணெய் நிறுவனம்,கச்சா எண்ணெய்

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக ஒரே விலையில் நீடித்து வருகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் 86.51 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் 79.21 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்றும், பெட்ரோல் விலையில் மாற்றம் ஏதும் இன்றி ரூ.86.51 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையிலும் மாற்றம் ஏதும் இன்றி ரூ.79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை முதல் அமலில் இருந்து வருகிறது.

Tags :
|
|
|