Advertisement

பெட்ரோல் விலை அதிகரிப்பு...ஒரு லிட்டர் 84.82 ரூபாய்க்கு விற்பனை

By: Monisha Thu, 27 Aug 2020 09:55:39 AM

பெட்ரோல் விலை அதிகரிப்பு...ஒரு லிட்டர் 84.82 ரூபாய்க்கு விற்பனை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் யை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும், கொரோனா பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 84.73 ரூபாய், டீசல் லிட்டர் 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

petrol,diesel,price,crude oil,oil company ,பெட்ரோல்,டீசல்,விலை,கச்சா எண்ணெய்,எண்ணெய் நிறுவனம்

இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9 காசுகள் விலை உயர்ந்துள்ளது.

இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் 84.82 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 31வது நாளாக விலை மாற்றமின்றி 78.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Tags :
|
|
|