Advertisement

அசத்தலான ப்ளிப்கார்ட் மொபைல் பொனாசா சேல் நாளையுடன் நிறைவடைகிறது!

By: Monisha Thu, 27 Aug 2020 5:55:00 PM

அசத்தலான ப்ளிப்கார்ட் மொபைல் பொனாசா சேல் நாளையுடன் நிறைவடைகிறது!

இந்தியாவில் ப்ளிப்கார்ட் மொபைல் பொனாசா சேல் எனும் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையில் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 மற்றும் ஐபோன் எக்ஸ்ஆர் போன்ற மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் நடத்தும் சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 28 ஆம் தேதியுடன் நிறைவு பெற இருக்கிறது.

ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி, ஐகூ 3, ஒப்போ ரெனோ 2 மற்றும் ஒப்போ ரெனோ 10எக்ஸ் ஜூம் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தள்ளுபடி மட்டுமின்றி பிரீபெயிட் மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளை ப்ளிப்கார்ட் வழங்கி வருகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட மொபைல்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எக்சேன்ஜ் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

சிறப்பு விற்பனையின் போது புதிய ஸ்மா்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. சலுகைகளை பொருத்தவரை ஐபோன் எஸ்இ 2020 (64 ஜிபி) மாடல் விலை ரூ. 42,500 இல் இருந்து ரூ. 35999 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது.

flipkart,mobile bonanza sale,realmy,iphone,oppo ,ப்ளிப்கார்ட்,மொபைல் பொனாசா சேல்,ரியல்மி,ஐபோன்,ஒப்போ

இதேபோன்று ஐபோன் எக்ஸ்ஆர் மாடலின் விலையில் ரூ. 6501 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 45999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி மற்றும் கூடுதல் எக்சேன்ஜ் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ஐபோன் மட்டுமின்றி ரெட்மி கே20 சீரிஸ், ஒப்போ ரெனோ 2எஃப், ஒப்போ ஏ5எஸ், ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி, ஐகூ 3, ஒப்போ ஏ12 மற்றும் விவோ வி50 போன்ற மாடல்களுக்கும் சிறப்பு எக்சேன்ஜ் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags :
|
|