Advertisement

ஆபரணத் தங்கத்தின் விலை விலை சற்று குறைந்தது!

By: Monisha Mon, 03 Aug 2020 5:38:08 PM

ஆபரணத் தங்கத்தின் விலை விலை சற்று குறைந்தது!

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து கொண்டே சென்ற நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலையில் கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே வந்தது. இந்தநிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.5188 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.64 குறைந்து ரூ.41 ஆயிரத்து 504க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 43576 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி 72.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Tags :
|
|
|