Advertisement

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 656 ரூபாய் சரிவு

By: Monisha Thu, 20 Aug 2020 3:21:03 PM

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 656 ரூபாய் சரிவு

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அதன்பிறகு கடந்த 8-ந்தேதியில் இருந்து சரிவை சந்தித்தது. எந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்ததோ, அதேபோல் குறைந்து வந்தது.

gold,silver,price,investment,chennai ,தங்கம்,வெள்ளி,விலை,முதலீடு,சென்னை

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருக்கும் நிலையில், இன்றும் விலை சற்று குறைந்துள்ளது. பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 656 ரூபாய் சரிந்து 40,672 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ 5,084-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலையிலும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்று 74.50 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 73.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|
|
|