Advertisement

ஆப்பிள் ஐபோன்களில் இருக்கும் ரகசிய அம்சம்

By: Karunakaran Mon, 28 Dec 2020 12:25:51 PM

ஆப்பிள் ஐபோன்களில் இருக்கும் ரகசிய அம்சம்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் வழங்கி இருக்கும் ரகசிய அம்சம் பற்றி பார்ப்போம். ஆப்பிள் ஐஒஎஸ் தளம் ஐபோன் பயன்படுத்துவோருக்கு ரிமைண்டர், நோட்ஸ் மற்றும் காலண்டர் என சில பொதுவான அம்சங்களை வழங்கி வருகிறது. இவை அனைத்திற்கும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகப்படியான மூன்றாம் தரப்பு செயலிகள் கிடைக்கின்றன.

பெரும்பாலான ஐபோன் பயனர்கள் தங்களது மாடலில் உள்ள மறைக்கப்பட்டு இருக்கும் ரகசிய அம்சங்களை இயக்க தவறிவிடுகின்றனர். அந்த வகையில் ஐபோன் கால்குலேட்டர் செயலியில் மறைக்கப்பட்ட அம்சம் உள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

apple,iphones,calculator,smartphones ,ஆப்பிள், ஐபோன்கள், கால்குலேட்டர், ஸ்மார்ட்போன்கள்

அதன்படி கால்குலேட்டர் செயலியில் அறிவியல் கால்குலேட்டர் மோட் மறைக்கப்பட்டு ரகசியமாக வழங்கப்படுகிறது. இருப்பினும், கால்குலேட்டர் செயலிக்கு சென்று பயனர்கள் இதனை ஆக்டிவேட் செய்ய வேண்டும். ஐபோனில் கால்குலேட்டர் செயலியை திறந்ததும், போனினை கிடைமட்ட வடிவில் வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது சாதாரண கால்குலேட்டர் செயலி அறிவியல் அம்சங்கள் நிறைந்த கால்குலேட்டராக மாறிவிடும். ஒருவேளை ஐபோனில் டில்ட் அம்சத்தை ஆஃப் செய்து இருப்பவர்கள், அதனை கண்ட்ரோல் சென்ட்டரில் இருந்து Portrait Orientation Lock அம்சத்தை ஆஃப் செய்ய வேண்டும்.

Tags :
|