Advertisement

பண்டிகை காலத்தை முன்னிட்டு விலையை குறைத்த விவோ நிறுவனம்

By: Nagaraj Fri, 06 Nov 2020 10:03:26 PM

பண்டிகை காலத்தை முன்னிட்டு விலையை குறைத்த விவோ நிறுவனம்

விலையை சற்றே குறைத்தது விவோ... பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனையை அதிகரிக்கும் விதமாக விவோ நிறுவனம், அதன் ஒய்91 ஐ 3 ஜிபி ரேம் ஸ்மார்ட்போனின் விலையில் 500 ரூபாய் தள்ளுபடியை வழங்கி உள்ளது.

இந்த விலை தள்ளுபடி விவோ நிறுவனத்தின் வலைதளத்தில் பிரதிபலித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக வெளிவந்த ஒய்91 ஐ ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் வகை 8,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த போனின் விலையில் 500 ரூபாயை விவோ நிறுவனம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் இந்த போனின் விலை 8,490 ரூபாயாக குறைந்துள்ளது. அதேசமயம் இதே மாடலின் 2 ஜிபி ரேம் ஸ்மார்ட்போனின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

vivo company,operating system,price reduction,sales ,விவோ நிறுவனம், இயங்குதளம், விலை குறைப்பு, விற்பனை

2ஜிபி ரேம் 16 ஜிபி மெமரி 7490 ரூபாய்க்கும், 2ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி போன் 7,999 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த ஸ்மார்ட்போனில், இரண்டு சிம்கார்டு இணைக்கும் வசதி. ஆண்டிராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தின் மேல் இயங்கும் ஃபன் டச் 4.5 ஒஎஸ் இயங்குதளத்துடன் 6.22 இன்ச் எச்டி பிளஸ் திரை, மீடியா டெக் ஹீலியோ பி22 பிராசசர், என சகல வசதிகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த போனின் இயங்குதளத்தை ஆண்டிராய்ட் 9 ஆக தரம் உயர்த்திக் கொள்ள முடியும். கேமராவை பொறுத்தவரை பின்புறத்தில் 13 மெகா பிக்சல் கேமராவும் முன்புறத்தில் 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் கொண்டிருக்கும் இந்த போன், 4ஜி, வைபை, புளூடூத் 5.0 4030 எம்ஏஎச் பேட்டரி என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட் உள்ளிட்ட வலைதளத்திலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

Tags :