Advertisement

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 1,464 ரூபாய் குறைந்தது!

By: Monisha Sat, 17 Oct 2020 12:23:02 PM

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 1,464 ரூபாய் குறைந்தது!

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்கள் முன்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் 30 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை சற்றென 40 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு தற்போது தங்கம் விலை சிறிது சிறிதாக குறைந்து 38 ஆயிரத்திற்கு கீழ் வந்துள்ளது.

jewellery,silver,price,investment,stock market ,ஆபரணத்தங்கம்,வெள்ளி,விலை,முதலீடு,பங்குச்சந்தை

இந்நிலையில் இன்று தங்கம் விலை ஆயிரத்திற்கு மேல் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 1,464 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 183 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு குறைந்து 65 ரூபாய் 40 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|
|