Advertisement

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிரடி சலுகைகள்!

By: Monisha Sat, 06 June 2020 4:27:39 PM

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிரடி சலுகைகள்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிரீபெயிட் பயனர்களுக்கு நான்கு மடங்கு பலன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதில் பயனர்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல், டிரெண்ட்ஸ் ஃபுட்வியர் மற்றும் ஏஜியோ தளங்களில் பயன்படுத்துவதற்கான தள்ளுபடி வவுச்சர்களும் வழங்கப்படுகின்றன.

ஜியோ அறிவித்திருக்கும் நான்கு மடங்கு பலன்கள் ஜியோ ரூ. 249 விலையில் துவங்கி அதற்கும் அதிக விலை சலுகைகளில் வழங்கப்படுகிறது. வவுச்சர்கள் ரீசார்ஜ் தொகைக்கு இணையான மதிப்புக்கு வழங்கப்படுகிறது. ரீசார்ஜ் நிறைவுற்றதும் வவுச்சர்கள் மைஜியோ செயலியின் கூப்பன்ஸ் பகுதியில் சேர்க்கப்படுகிறது.

ரீசார்ஜ் செய்யும் போது வழங்கப்படும் தள்ளுபடி வவுச்சர்களை மேலே குறிப்பிடப்பட்டு உள்ள ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் அடுத்த முறை பொருட்களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

reliance jio,reliance digital,trends footwear,ajio,offers ,ரிலையன்ஸ் ஜியோ,ரிலையன்ஸ் டிஜிட்டல், டிரெண்ட்ஸ் ஃபுட்வியர்,ஏஜியோ,சலுகைகள்

புதிய திட்டத்தில் பயன்பெற வாடிக்கையாளர்கள் ஜியோ பிரீபெயிட் சலுகையில் குறைந்தபட்சம் ரூ. 249 விலையில் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். ரீசார்ஜ் செய்து முடித்ததும் வவுச்சர்கள் மைஜியோ செயலியின் கூப்பன் பிரிவில் சேர்க்கப்படும்.

இந்த வவுச்சர்களை பயன்படுத்த பயனர்கள் குறைந்தபட்சம் ரூ. 999 விலைக்கு பொருட்களை வாங்க வேண்டும். ஜியோ புதிய சலுகையில் பயன்பெற வாடிக்கையாளர்கள் ஜூன் 1 ஆம் தேதி துவங்கி ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

Tags :
|