Advertisement

விற்பனை அதிகரிப்பு குறித்து டொயோட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

By: Nagaraj Mon, 07 Aug 2023 8:22:42 PM

விற்பனை அதிகரிப்பு குறித்து டொயோட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

புதுடில்லி: டொயோட்டா நிறுவனம் அறிக்கை... 2023-ம் ஆண்டின் 8-வது மாதமான ஆகஸ்ட் மாதம் தொடங்கி இருக்கும் நிலையில் நாட்டில் இருக்கும் ஆட்டோ துறை நிறுவனங்கள் கடந்த மாதத்திற்கான (ஜூலை , 2023) மாதாந்திர விற்பனை பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) நிறுவனம் ஜூலை 2023-ல் அதன் விற்பனை பற்றிய விவரங்களை அறிவித்திருக்கிறது. இந்த அறிக்கையில் 21,911 யூனிட்கள் (உள்நாட்டு + ஏற்றுமதி) விற்பனையுடன் சிறந்த மாதாந்திர விற்பனையை பதிவு செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம், நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 20,759 யூனிட்டுகளாக இருந்தது, அதே நேரத்தில் ஏற்றுமதி 1,152 யூனிட்களாக இருந்தது. ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டா கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலையில் விற்கப்பட்ட 19,693 யூனிட்களுடன் இந்த ஆண்டு ஜூலை விற்பனையை ஒப்பிடும் போது, நிறுவனம் இயர்-ஆன்-இயர்-ல் 11 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு மே மாதத்தில் டொயோட்டா நிறுவனம் அதன் மாதாந்திர மொத்த விற்பனையை 20,410 யூனிட்களாக பதிவு செய்த போது, அதன் முந்தைய விற்பனை சாதனையை முறியடித்தது. இந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை ஆண்டுதோறும் 10 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

company,growth,sales,fiscal year,toyota,customers ,நிறுவனம், வளர்ச்சி, விற்பனை, நிதியாண்டு, டொயோட்டா, வாடிக்கையாளர்கள்

நடப்பாண்டு ஜூன் மாதத்தில் உள்நாட்டு மொத்த விற்பனை 19,608 யூனிட்கள் மற்றும் ஏற்றுமதி 1,152 யூனிட்கள் என பதிவாகி டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை 12 சதவீதம் வளர்ச்சியடைந்தது. டொயோட்டாவின்பு திய Glanza, Urban Cruiser Hyryder, Innova Hycross மற்றும் Hilux pick-up உள்ளிட்ட வாகனங்கள் வரிசையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் டொயோட்டாவின் விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது.

நிறுவனத்தின் வலுவான விற்பனை வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த உயரதிகாரி Atul Sood, "ஜூலை 2023 எங்கள் நிறுவனத்திற்கு மகத்தான விற்பனை இருந்தது, 21,911 யூனிட்களை விற்று எங்களின் அதிகபட்ச மொத்த விற்பனையை பதிவு செய்திருக்கிறோம். Urban Cruiser Hyryder, Innova Hycross, Fortuner, Legender, Innova Crysta மற்றும் Camry உள்ளிட்ட எங்களின் முழு தயாரிப்புகளும் அமோகமாக விற்பனையாகி இருக்கிறது.

இந்த விற்பனையானது வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அதீத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றார்.

2023 காலண்டர் ஆண்டிற்கான விற்பனையைப் பொறுத்தவரை, ஜனவரி மற்றும் ஜூலை இடையே டொயோட்டா மொத்தம் 124,282 யூனிட்களை விற்றிருக்கிறது. தவிர ஏப்ரல் 2023 மற்றும் ஜூலை 2023 மாதங்களுக்கு இடையில் 77,439 யூனிட்கள் விற்றதுடன், கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட 61,506 யூனிட்களை விட 26 சதவீதம் வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்திருக்கிறது.

Tags :
|
|
|