Advertisement

ஜும் செயலிக்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மீட் களமிறங்கியது

By: Nagaraj Sat, 04 July 2020 9:01:21 PM

ஜும் செயலிக்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மீட் களமிறங்கியது

வந்திடுச்சு ஜியோவின் புதிய செயலி... ஜூம் செயலிக்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'ஜியோ மீட்' அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

வாடிக்கையாளர்களின் தகவல் திருட்டு போன்ற பாதுகாப்பின்மை காரணமாக ஜூம் செயலியை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இந்நிலையில் ஜூம் செயலிக்கு பதிலாக 'ஜியோமீட்' என்ற செயலியை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் உள்ளிட்ட சேவைகளைப் போலவே ஜியோ மீட் செயலி மூலமாக எச்டி தரத்திலான வீடியோ அழைப்புகளை ஏற்க முடியும். அதேநேரம் ஜூம் செயலி போல இதில் 40 நிமிடம் மட்டும் தான் என்ற நேர வரம்பு இல்லை. 24 மணிநேரமும் நாம் வீடியோ அழைப்புகளை நீட்டிக்கலாம்.

introducing the digital empire,reliance,jio meat, ,டிஜிட்டல் சாம்ராஜ்ஜியம், ரிலையன்ஸ், ஜியோ மீட், அறிமுகம்

ஜியோமீட் மூலம் மேற்கொள்ளப்படும் அனைதது டிஜிட்டல் சந்திப்புகளுக்கும் பாஸ்வேர்டு மற்றும் என்கிரிப்சன் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜியோ மீட்டை, கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே இது லட்சம் பதிவிறக்கங்களை கடந்து விட்டது.

ஜியோ மீட் மூலம் 'மேட் இன் இந்தியா' என்ற ஹேஷ்டேக் நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. ஃபேஸ்புக் மற்றும் இன்டெல் நிறுவனங்களில் முதலீட்டைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் டிஜிட்டல் சாம்ராஜியத்தையும் விரிவுபடுத்தி உள்ளது.

Tags :