Advertisement

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம்!

By: Monisha Wed, 12 Aug 2020 6:32:33 PM

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்3 எம் எஸ்யுவி மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி இந்த கார் விலை ரூ. 1.1 கோடி, எக்ஸ் ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

bmw,x3m,indian market,corona virus,engine ,பிஎம்டபிள்யூ,எக்ஸ்3 எம்,இந்திய சந்தை,கொரோனா வைரஸ்,என்ஜின்

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் மாடலில் டவின் டர்போ, ஸ்டிரெயிட்-6 என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 480 பிஹெச்பி பவர், 600 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.2 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.

மேலும் இந்த கார் மணிக்கு 250 கிலமீட்டர் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. எனினும், இதனை மணிக்கு 280 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கம் வகையில் காரின் உச்ச வேகத்தை நீட்டித்துக் கொள்ள முடியும்.

Tags :
|
|