Advertisement

ஜியோ நிறுவனத்தில் இணைந்த 16.8 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள்

By: Nagaraj Sun, 19 June 2022 8:40:19 PM

ஜியோ நிறுவனத்தில் இணைந்த 16.8 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள்

புதுடில்லி: 16.8 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள்... இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு சேவை நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஏப்ரல் மாதத்தில் 16.8 லட்சம் கைப்பேசி வாடிக்கையாளா்களை ஈா்த்துள்ளது.

இதுகுறித்து இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளதாவது: ரிலையன்ஸ் ஜியோ: ஜியோ நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிதாக 16.8 லட்சம் வாடிக்கையாளா்களை இணைத்துக் கொண்டதையடுத்து அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த கைப்பேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை 40.5 கோடியாக உயா்ந்துள்ளது.

பாா்தி ஏா்டெல்: சுனில் மிட்டல் தலைமையிலான பாா்தி ஏா்டெல் நிறுவனம் ஏப்ரலில் 8.1 லட்சம் வாடிக்கையாளா்களை ஈா்த்ததையடுத்து ஒட்டுமொத்த வாடிக்கையாளா் 36.11 கோடியை எட்டியுள்ளது. ஜியோ, ஏா்டெல் நிறுவனங்கள் வாடிக்கையாளா்களை ஈா்த்த நிலையில் வோடஃபோன் ஏப்ரலில் 15.68 லட்சம் வாடிக்கையாளா்களை இழந்துள்ளது. இதையடுத்து, அதன் ஒட்டுமொத்த கைப்பேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை 25.9 கோடியாக சரிந்துள்ளது.

reliance,market contribution,geo,troy,info ,
ரிலையன்ஸ், சந்தை பங்களிப்பு, ஜியோ, டிராய், தகவல்

மொத்த வாடிக்கையாளா்: 2022 ஏப்ரல் இறுதி நிலவரப்படி இந்தியாவின் மொத்த கைப்பேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை 114.3 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் கைப்பேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை 51.8 கோடியாக உயா்ந்த நிலையில், நகா்ப்புற பகுதிகளில் 62.4 கோடியாக குறைந்துள்ளது.

நகா்ப்புற மற்றும் ஊரக கைப்பேசி வாடிக்கையாளா்களின் மாதாந்திர வளா்ச்சி விகிதம் முறையை 0.07 சதவீதம் மற்றும் 0.20 சதவீதம் என்ற அளவில் உள்ளது. பிராட்பேண்ட்: ஏப்ரல் இறுதி நிலவரப்படி பிராட்போண்ட் வாடிக்கையாளா் எண்ணிக்கை 78.87 கோடியாக உயா்ந்துள்ளது.

முதல் ஐந்து நிறுவனங்கள் மட்டும் 98.4 சதவீத சந்தைப் பங்களிப்பினை அளித்து வருகின்றன. இதில் ரிலையன்ஸ் ஜியோ (41.1 கோடி), பாா்தி ஏா்டெல் (21.5 கோடி), வோடஃபோன் ஐடியா (12.2 கோடி) நிறுவனங்களும் அடங்கும் என டிராய் தெரிவித்துள்ளது.

Tags :
|
|