- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- பூக்களின் விலை 2 மடங்கு உயர்வு
பூக்களின் விலை 2 மடங்கு உயர்வு
By: vaithegi Sat, 16 Sept 2023 1:45:34 PM
சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை இரண்டு மடங்கு அதிகரிப்பு .. தமிழகத்தில் வருகிற செப்.18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. பொதுமக்கள் இப்போதே வழிபாட்டிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய தொடங்கி விட்டனர்.
கடை வீதிகளில் விநாயகர் சிலை மற்றும் பூஜைக்கு தேவையான தேங்காய், பழம், பூ போன்ற பொருட்களின் விற்பனை சூடு பிடித்து உள்ளது. மேலும் அத்துடன் சுபமுகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது.
இதை ஸ்த்தூது மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ. 600-க்கு விற்கப்பட்ட மல்லிகை பூவின் விலை இன்று ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மல்லிகை பூவை தொடர்ந்து பிச்சிப்பூ கிலோ ரூ. 800-க்கும் அரளிப்பூ ரூ. 200க்கும் முல்லைப்பூ ரூ.800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பண்டிகை காலம் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் பூக்களின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டு உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.