Advertisement

ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 360 குறைவு

By: vaithegi Wed, 17 May 2023 12:22:23 PM

ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 360 குறைவு

சென்னை: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைவதும் கூடுவதுமாய் இருந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த 2 நாட்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்துவதும் திடீரென குறைவதுமாக இருக்கிறது.

மேலும், தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தாலும் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 50 ஆயிரம் அளவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் நகை வாங்குபவர்கள் தவித்து கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து நேற்று, சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து 6195 ரூபாய்க்கும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்து 49 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

chennai,gold price ,சென்னை,தங்கத்தின் விலை

நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து இருக்கிறது. அதாவது 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ரூ. 6150 க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 49 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், சென்னையில் நேற்று 1 கிராம் வெள்ளியின் விலை 78.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 60 காசுகள் குறைந்து 78.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :