Advertisement

இல்லத்தரசிகளுக்கு ஒரு நற்செய்தி ..இன்று குறைந்தது தங்கம்

By: vaithegi Tue, 08 Aug 2023 11:38:38 AM

இல்லத்தரசிகளுக்கு ஒரு நற்செய்தி ..இன்று குறைந்தது தங்கம்

சென்னை : சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44,320 ரூபாய்க்கு விற்பனை ...தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது.

இதற்கு இடையே வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை விலை மாற்றமின்றி அதே விலையில் நீடித்தது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 1 சவரன் 44,440 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோன்று ஆபரண தங்கம் 1 கிராம் விலை மாற்றமின்றி 5,555 ரூபாய்க்கு விற்பனையானது.

gold,sale ,தங்கம் , விற்பனை

இந்நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 1 சவரன் 44,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று ஆபரண தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 1 கிராம் தங்கம் 5,540 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து தங்கத்தை போல் வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 77.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1கிலோ வெள்ளி ஆயிரம் ரூபாய் குறைந்து 77,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|