Advertisement

பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.300 ஐ தாண்டி விற்பனை ..பொதுமக்கள் கடும் அவதி

By: vaithegi Sat, 02 Sept 2023 2:21:07 PM

பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.300 ஐ தாண்டி விற்பனை ..பொதுமக்கள் கடும் அவதி

பாகிஸ்தான் : பாகிஸ்தானில் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருள்களின் விலை அதிகரிப்பு காரணமாக 1 லிட்டர் பெட்ரோல் விலையானது ₹300 தாண்டி விற்பனை ...பாகிஸ்தானில் கடந்தாண்டு முதல் அத்தியாவசிய பொருட்களின் விலையானது அதிக அளவில் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதனால் அங்கு அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து கொண்டு வருகிறது. அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களின் மூலம் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

civilians,pakistan,petrol ,பொதுமக்கள் ,பாகிஸ்தான் ,பெட்ரோல்


இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையானது இதுவரை வரலாறு காணாத அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் லிட்டருக்கு ரூபாய் 15 உயர்த்தப்பட்டு 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. .305.56 க்கும், டீசல் விலை ₹311.54 விற்பனை செய்யப்படுகிறது.

இதனை அடுத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

Tags :