Advertisement

வணிக பயன்பாட்டு காஸ் சிலிண்டரின் விலை ரூ.96 குறைப்பு

By: Nagaraj Thu, 01 Sept 2022 2:57:25 PM

வணிக பயன்பாட்டு காஸ் சிலிண்டரின் விலை ரூ.96 குறைப்பு

சென்னை: வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டரின் விலை ரூ. 96 குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ரூ. 2,045-க்கு விற்பனையாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது பொதுவானது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

prices drop,gas cooks,merchants,no change ,விலை குறைந்தது, சமையல் எரிவாயு, வணிகர்கள், மாற்றமில்லை

இதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு ரூ. 2,141-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி ரூ. 96 குறைக்கப்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை கடந்த மே மாதத்திற்கு பிறகு 5-ஆவது முறையாக குறைக்கப்பட்டிருப்பது வணிகா்கள் மத்தியில் இருந்துவந்த பெரும் கவலையை சற்று குறைத்துள்ளது.


வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உருளையின் விலையில் எந்த மாற்றமின்றி விற்கப்படுகிறது.

Tags :