Advertisement

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை

By: vaithegi Wed, 19 Apr 2023 12:44:26 PM

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை


இந்தியா: பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 97 புள்ளிகள் குறைந்து 59,629 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,634 ஆகவும் வர்த்தகம் .... கடந்த 2 நாட்களாகவே சரிவில் வர்த்தககமாகி வந்த பங்குச்சந்தை வாரத்தின் 3-வது நாளான இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.இதையடுத்து இன்றைய வர்த்தக நாளில் 59,745 புள்ளிகள் என்று சரிவில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 97.74 புள்ளிகள் அல்லது 0.16% என சரிந்து 59,629 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 25.95 புள்ளிகள் அல்லது 0.15% சரிந்து 17,634 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,727 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,706 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

stock market,trading ,பங்குச்சந்தை,வர்த்தக


இதனை அடுத்து டாடா ஸ்டீல் , ஆக்சிஸ் வங்கி , மஹிந்திரா & மஹிந்திரா , ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் , லார்சன் & டூப்ரோ , ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.

மேலும் இன்ஃபோசிஸ் லிமிடெட், எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், விப்ரோ லிமிடெட், என்டிபிசி லிமிடெட், டெக் மஹிந்திரா, இண்டஸ்இண்ட் வங்கி, உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Tags :