Advertisement

திடீரென குறைந்தது தங்கம்

By: vaithegi Fri, 03 Feb 2023 3:12:17 PM

திடீரென குறைந்தது தங்கம்

சென்னை: சமீப காலமாக நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைத்துள்ளது தங்கம் விலை தான். கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத விலை உயர்வை தங்கம் சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பட்ஜெட் தாக்கலின் எதிரொலியாக நேற்று மட்டும் காலை மற்றும் மாலை நேர நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணதங்கத்தின் விலை ரூ.1000 ஐ கடந்தது.

இதனை தூது நேற்று பிற்பகல் நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் 5505 ரூபாயாகவும், ஒரு சவரன் 44 ஆயிரத்து 40 ரூபாயாகவும் விற்பனை ஆனது.

gold,chennai ,தங்கம்,சென்னை

ஆனால் இன்று மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தங்கம் விலை திடீரென சரிந்துள்ளது.எனவே அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 சரிந்து ரூ.5,440-க்கு விற்பனையாகிறது. மேலும் சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.43520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.1.40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.76.40-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1400 குறைந்து ரூ.76,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|