Advertisement

  • வீடு
  • வணிகம் or வர்த்தகம்
  • ஆவின், தீபாவளி முன்னிட்டு தள்ளுபடி விலையில் இனிப்புகளை விற்பனை செய்ய இருப்பதாக அறிவிப்பு

ஆவின், தீபாவளி முன்னிட்டு தள்ளுபடி விலையில் இனிப்புகளை விற்பனை செய்ய இருப்பதாக அறிவிப்பு

By: vaithegi Thu, 26 Oct 2023 2:47:03 PM

ஆவின், தீபாவளி முன்னிட்டு தள்ளுபடி விலையில் இனிப்புகளை விற்பனை செய்ய இருப்பதாக அறிவிப்பு

சென்னை: தள்ளுபடி விலையில் இனிப்புகள் விற்பனை ... தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) மூலம் தினமும் 33 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிறுவனம் மூலம் பால் மட்டுமில்லாமல், வெண்ணெய், நெய், பால்கோவா,

இதனை அடுத்து தயிர், லஸ்ஸி, மோர், ஐஸ்க்ரீம் போன்ற 225 வகையான பால் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அது மட்டுமில்லாமல் பால் சார்ந்த இனிப்புகளும் இந்த நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

sale,diwali,avin ,விற்பனை ,தீபாவளி ,ஆவின்

அந்த வகையில் வருகிற நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு ஆவின் நிறுவனம் தள்ளுபடி விலையில் இணைப்புகளை விற்பனை செய்ய முடிவு செய்து உள்ளது. அந்த வகையில் ரூ.300, ரூ.500, ரூ.900 ஆகிய 3 தள்ளுபடி முறையில் ஆவின் நிறுவனம் இணைப்புகளை விற்பனை செய்ய இருக்கிறது.

அதில் மைசூர்பாகு 250 கிராம், மிக்சர் 200கிராம், பிஸ்கட் 80கிராம் போன்றவை ரூ.300க்கும், நெய் பாதுஷா 250கிராம், பாதாம் மிக்ஸ் 200கிராம், குலாப் ஜாமூன் 200கிராம் உள்ளிட்டவை ரூ.500க்கு விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Tags :
|
|