Advertisement

  • வீடு
  • வணிகம் or வர்த்தகம்
  • கடந்த ஓராண்டு நடந்த ஆய்வின்படி…. இந்தியாவில் பீர் மற்றும் மதுபான விற்பனை 18 சதவீதம் அதிகரிப்பு

கடந்த ஓராண்டு நடந்த ஆய்வின்படி…. இந்தியாவில் பீர் மற்றும் மதுபான விற்பனை 18 சதவீதம் அதிகரிப்பு

By: vaithegi Wed, 08 June 2022 1:51:57 PM

கடந்த ஓராண்டு நடந்த ஆய்வின்படி…. இந்தியாவில் பீர் மற்றும் மதுபான விற்பனை 18 சதவீதம் அதிகரிப்பு

மும்பை: கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாகவே இந்தியாவில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்து மட்டுமல்லாமல் மதுபான கடைகளும் மூடப்பட்ட நிலையில் இருந்தன. இதனால் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்த நிலையிலேயே இருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை திருப்பியுள்ளது. இதனையடுத்து மதுபான கடைகளும் திறக்கப்பட்டன. அதனால் குறைந்து வந்த மது குடிப்பவர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர தொடங்கியுள்ளது. இதன் காரணமாகவே மது விற்பனையும் அதிகரித்துள்ளதாக ஆய்வின்படி தெரிவிந்துள்ளது.

கொரோனா காலத்தில் சுமார் 20 சதவீதம் பேர் மட்டுமே மது போதையில் விடுபட்டு இருந்த நிலையில், தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் பீர் மற்றும் மதுபான பிரியர்களின் எண்ணிக்கை உயர்ந்து விற்பனையும் 18 சதவீதம் அதிகரித்து வந்துள்ளது. இதனால், வரும் நடப்பு ஆண்டில் மதுபான பிரியர்கள் மற்றும் அதன் விற்பனையும் வெகுவாக உயர வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிகிறது.

Tags :
|