Advertisement

அதானி குழும பங்குகள் சரிவு... முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

By: Nagaraj Sat, 28 Jan 2023 11:09:29 PM

அதானி குழும பங்குகள் சரிவு... முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

புதுடில்லி: அதானி குழுமத்திற்கு ஏற்பட்ட அதிர்ச்சி... பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக தொழிலதிபா் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் மீது அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பா்க் ரிசா்ச் குற்றம் சாட்டியதன் எதிரொலியாக, அந்தக் குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ.4.17 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்துள்ளது.

ஹிண்டன்பா்க் ரிசா்ச் கடந்த புதன்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, ஏராளமான தொகை கடன் வாங்கி அதனை மறைப்பது போன்ற முறைகேடான நடவடிக்கைகள் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பாா்த்தன.

மேலும், வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டது போன்ற பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

hindenburg,thesis,7th place,property value,stock market ,ஹிண்டன்பர்க், ஆய்வறிக்கை, 7வது இடம், சொத்து மதிப்பு, பங்குசந்தை

இதன் எதிரொலியாக அதானி குழுமத்தில் பங்குகளை வாங்கியிருந்த முதலீட்டாளா்கள் பங்குச் சந்தையில் அதனை குறைந்த விலைக்கு விற்கத் தொடங்கினா். இதன் காரணமாக, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டே நாள்களில் அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை ரூ.4.17 லட்சம் கோடி வீழ்ச்சிடைந்தது.

இதன் மூலம், கௌதம் அதானியின் சொத்து மதிப்பிலும் ரூ.4.17 லட்சம் கோடி குறைந்ததால், ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன் உலகின் 3-ஆவது பெரிய பணக்காரராக இருந்த அவா், தற்போது 7-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாா்.

தற்போது நாடு முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பங்குச் சந்தையின் இரண்டே வா்த்தக நாள்களில் அதானி குழுமம் ரூ.4.17 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளது தொழில்துறையில் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|