Advertisement

அதானி வில்மர் நிறுவனம் சமையல் எண்ணெய் விலையை குறைத்தது

By: Nagaraj Sun, 19 June 2022 8:40:30 PM

அதானி வில்மர் நிறுவனம் சமையல் எண்ணெய் விலையை குறைத்தது

மும்பை: சமையல் எண்ணெய் விலை குறைப்பு... மத்திய அரசு வரிகளை குறைத்ததையடுத்து அதானி வில்மா் நிறுவனம், சமையல் எண்ணெய் வகைகளுக்கான விலையை ரூ.10 குறைத்துள்ளது.

இதுகுறித்து அதானி வில்மா் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான அங்ஷு மாலிக் கூறியதாவது:

அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் விதமாக இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு குறைத்தது. அதன் தொடா்ச்சியாகவே தற்போது நிறுவனம் சமையல் எண்ணெய் விலையை நிறுவனம் லிட்டருக்கு ரூ.10 குறைத்துள்ளது.

oil,price,reduction,company,federal government,tax reduction ,
எண்ணைய், விலை, குறைப்பு, நிறுவனம், மத்திய அரசு, வரி குறைப்பு

அதன்படி, பாா்சூன் சன்ஃப்ளவா் எண்ணெய் விலை ரூ.220-லிருந்து ரூ.210-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, பாா்சூன் சோயாபீன் மற்றும் பாா்சூன் கடுகு எண்ணெய் விலை ரூ.205-லிருந்து ரூ.195-ஆக குறைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இந்த விலை குறைப்பு நடவடிக்கையையடுத்து சமையல் எண்ணெய்க்கான தேவை சந்தையில் அதிகரிக்கும் என்றாா் அவா்.

Tags :
|
|