Advertisement

மீண்டும் அதிகரித்த தங்கம்

By: vaithegi Tue, 14 Nov 2023 1:14:45 PM

மீண்டும் அதிகரித்த தங்கம்

சென்னை: இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,920க்கு விற்பனை ..சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது.இதையடுத்து கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,600க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.44,800க்கு விற்பனையானது.

இதனை அடுத்து தீபாவளி தினத்தன்று அதே விலையில் விற்பனையானது. இதேபோல் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 44,720க்கு விற்பனையானது.. 1 கிராம் தங்கம் விலையானது ரூ.10 குறைந்து 1 கிராம் ₹5,590க்கும் விற்பனையானது.

gold,sale ,தங்கம் ,விற்பனை

இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,920க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.5,615ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ரூ.76.00க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி ரூ.76,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|