Advertisement

மீண்டும் அதிகரித்த ஆபரணத் தங்கம்

By: vaithegi Sat, 23 Sept 2023 2:09:52 PM

மீண்டும் அதிகரித்த ஆபரணத் தங்கம்

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது. நேற்று முன் தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து 44 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூபாய் 20 குறைந்து 1 கிராம் ஆபரண தங்கம் 5,530 ஆக விற்பனையானது.

இதையடுத்து நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து 1 கிராம் ரூ. 5,510 ஆக விற்பனையானது. சவரனுக்கு ரூ. 160 குறைந்து 1 சவரன் ரூ.44,080 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வெள்ளி ரூ.79.00 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.79,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

jewelery gold,sale ,ஆபரணத் தங்கம்,விற்பனை

இந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 அதிகரித்து 1 சவரன் தங்கம் ரூ.44,168-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 அதிகரித்து ரூ.5,521-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.79.30 ஆகவும், கிலோவுக்கு 300 ஆக அதிகரித்து ரூ.79,300 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :