Advertisement

ஆஹா புடவை போல வருமா... இவை அமோக விற்பனையாகும் புடவை ரகங்கள்

By: Nagaraj Tue, 08 Nov 2022 6:42:08 PM

ஆஹா புடவை போல வருமா... இவை அமோக விற்பனையாகும் புடவை ரகங்கள்

சென்னை: எத்தனை வகை பேஷன் டிரெஸ் வந்தாலும் புடவைகளை அடித்துக் கொள்ள முடியாது. அந்த வகையில் தமிழ்நாட்டின் புடவை வகைகள் சிலவற்றை பார்ப்போம்.

பல்வேறு வித மனிதர்கள் வாழும் தமிழகத்தில் புடவை வகைகளும் பலவகையானவை. பட்டுப்புடவை முதல் செட்டிநாட்டு புடவைகள் வரை தமிழ்நாட்டின் புடவை வகைகள் சிறப்பான தோற்றம் தருபவை.

காஞ்சிவரம் சில்க் புடவைகள்: இந்த வகைப் புடவைகள் இந்தியாவுக்கே பெருமை தேடித் தருபவை. வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு ஏற்றுமதி ஆவதிலும் முதலிடத்தை பிடித்திருக்கும் காஞ்சிவரம் பட்டுப் புடவைகள் நமது தமிழகத்தில் உள்ள காஞ்சிவரம் எனும் ஊரில் தயார் ஆகிறது. பல கை வேலைப்பாடுகள், கலைநுணுக்கங்கள் கொண்ட புடவைகள் இந்தியாவின் பெருமை.

ராசிபுரம் புடவைகள்: ராசிபுரம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். அங்கே கைத்தறி நெசவுகளும் பட்டுத்தறிகளும் தான் குலத்தொழில். நிறைய நெசவாளர்களை தன்னகத்தே கொண்ட ஊரில் கைத்தறி புடவைகளில் நெசவாளர்களின் கைவண்ணம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். பட்டுபுடவைகளிலும் காஞ்சிவரம் புடவைக்கு நிகரான தரத்தை இவர்கள் வழங்குகிறார்கள்.

sect cotton,sarees,salat weavers,lace border ,செக்ட் காட்டன், புடவைகள், சேலத்து நெசவாளர்கள், ஜரிகை பார்டர்

தமிழ்நாட்டு திருமணங்கள் எப்போதும் புடவைகளால் நிறைந்திருக்கும் என்றால் மிகையில்லை. இன்றும் நம் தமிழ் திருமணங்களில் பட்டுபுடவைகள் தான் முன்னிலை வகிக்கின்றன. அதிலும் டிசைனர் புடவைகள், பியூஷன் புடவைகள் என பல விதமான புடவைகள் வந்திருக்கின்றன. இதனைத் தவிர இப்போதெல்லாம் வடஇந்தியர்கள் போல லெஹன்கா அணியும் கலாச்சாரமும் வழக்கத்தில் இருக்கிறது. ஆனாலும் பாரம்பர்ய திருமணப்புடவைகள் என்றாலே அது தமிழகம்தான்.

டிசைனர் புடவைகள்: கலாச்சாரம் வளர வளர புடவை நெசவுகளில் புதுமை புகுத்துவது எல்லா நாடுகளிலும் வழக்கம். ஆகவே அதற்காகவே டிசைனர் புடவைகள் தயார் ஆனது. எம்ப்ராய்டரி முதல் கண்ணாடி வேலைப்பாடுகள் வரை கலையின் கைவண்ணத்தை புடவையில் காட்டினார்கள். மனித கற்பனை திறனையும் அவர்கள் உழைப்பையும் நேரத்தையும் இந்த டிசைனர் புடவைகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் அதிக விலை தர வேண்டி இருக்கிறது. ஆனாலும் அணிபவரை அழகாக்கும் அற்புதம் வாய்ந்தது.

கோவை பருத்தி புடவைகள்: கோவை காட்டன் புடவைகள் எப்போதுமே தனி சிறப்பு வாய்ந்தவை. அணிந்து கொள்ள மிருதுவாகவும் சருமத்திற்கு நண்பனாகவும் இருக்கும் இந்தப் புடவைகளின் தரம் பல வருடங்களுக்கு நிலைத்து இருக்கும் . தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில் பருத்தி உற்பத்தி ஆகிறது என்பது சிறப்பு செய்தி. உற்பத்தி ஆகும் இடத்திலேயே தயாரிக்கப்படும் புடவைகள் தரத்திற்கான உத்தரவாதம் மற்றும் விலை மலிவு ஆகியவற்றை குறிப்பிடுகிறது.

நெகமம் புடவைகள்: பொள்ளாச்சிக்கு அருகில் இருக்கும் சிறிய கிராமத்தில் தான் தமிழகமெங்கும் உள்ள ஆடைக் கடைகளுக்கு புடவைகள் தயார் ஆகின்றன. இங்கே விற்கப்படும் கிராமத்து பருத்தி புடவைகள் மற்றும் அதன் தனித்துவமான டிசைன் பெரியவர்கள் அணிய மிருதுவாக இருக்கும் தன்மை ஆகியவையால் புடவைகள் என்றால் நெகமம் புடவைகளை நாம் தவற விட முடியாது.


சேலம் புடவைகள்: சேலம் புடவைகள் இங்கும் நெசவு தொழில்தான். பருத்தியில் பல்வேறு வண்ண சாயங்கள் சேர்த்து பியூஷன் முறையில் புதுமையை புகுத்துவார்கள் சேலத்து நெசவாளர்கள். அதே சமயம் தரம் பல வருடங்கள் நிலைக்கும். பிளைன் புடவையில் ஜரிகை பார்டர் அல்லது கட்டம் போட்ட செக்ட் காட்டன் புடவைகள் இவர்கள் சிறப்பம்சம்.

Tags :
|