- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- டில்லி - திருவனந்தபுரம் இடையே ஏர் இந்தியாவின் புதிய சேவை தொடக்கம்
டில்லி - திருவனந்தபுரம் இடையே ஏர் இந்தியாவின் புதிய சேவை தொடக்கம்
By: Nagaraj Fri, 17 Feb 2023 10:20:49 AM
புதுடெல்லி: புதுடெல்லி மற்றும் திருவனந்தபுரம் இடையே ஏர் இந்தியா நிறுவனம் புதிய சேவையை தொடங்கியுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இண்டிகோ மற்றும் விஸ்தாரா ஆகியவை புது தில்லி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு இடையே தினசரி மூன்று விமானங்களை இயக்குகின்றன. தற்போது இந்த வழித்தடத்தில் ஏர் இந்தியா புதிய தினசரி சேவையை தொடங்கியுள்ளது.
இந்த விமானம் AI 829 திருவனந்தபுரத்தில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு 9.25 மணிக்கு டெல்லி விமான நிலையத்தை வந்தடையும். ஏஐ 830 என்ற விமானம் டெல்லியில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.20 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடைகிறது.
இந்த விமானங்களில் 180 பேர் பயணம் செய்யலாம். ஏர் இந்தியாவின் 4வது சேவை இது என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது