Advertisement

அமேசான் பிரைம் சந்தாவை இலவசமாக வழங்கும் ஏர்டெல்!

By: Monisha Thu, 08 Oct 2020 6:26:53 PM

அமேசான் பிரைம் சந்தாவை இலவசமாக வழங்கும் ஏர்டெல்!

ஏர்டெல் நிறுவனத்தின் துவக்க விலை சலுகைகள் அதவாது 40Mbps மற்றும் 100Mbps உடன் அமேசான் பிரைம் சந்தாவை இலவசமாக வழங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய சலுகை பற்றிய தகவல் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் காணப்படுவதாக சில பயனர்கள் தெரிவித்தனர்.

ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகை விலை ரூ. 499 முதல் துவங்குகிறது. முன்னதாக இதில் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படாமல் இருந்தது. அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவை 200Mbps மற்றும் அதிக வேகம் கொண்ட பிராட்பேண்ட் சலுகைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

amazon prime,subscription,airtel,broadband,thanks app ,அமேசான் பிரைம்,சந்தா,ஏர்டெல்,பிராட்பேண்ட்,தேங்ஸ் செயலி

தற்சமயம் ஏர்டெல் பிராட்பேண்ட் துவக்க விலை சலுகைகளிலும் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. புதிய சலுகை விவரங்கள் ஏர்டெல் வலைதளம் மற்றும் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனினும், சலுகை பலன்கள் சிலருக்கு மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

புதிய மாற்றத்தின் படி ஏர்டெல் ரூ. 499, ரூ. 589 போன்ற சலுகைகளில் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இவற்றில் அன்லிமிட்டெட் டேட்டா, அதிகபட்சம் 40Mbps வேகம், அன்லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்டிரீம் செயலிக்கான சந்தா வழங்கப்படுகிறது.

Tags :
|