Advertisement

200 பில்லியன் டாலர் சொத்து சேர்த்து அமேசான் ஜெஃப் பெசோஸ் சாதனை

By: Nagaraj Fri, 28 Aug 2020 5:01:11 PM

200 பில்லியன் டாலர் சொத்து சேர்த்து அமேசான் ஜெஃப் பெசோஸ் சாதனை

புதிய சாதனை... அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ், 200 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த உலகின் முதல் நபராக உருவெடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக அமேசான் இருந்து வருகிறது. இதன் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அமெரிக்காவில் கடந்த 1994 ஆம் ஆண்டு சிறிய அளவில் இந்த நிறுவனத்தை தொடங்கினார். கடந்த 26 ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த ஜனவரி 1 ஆம் தேதி அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 115 பில்லியன் டாலராக இருந்தது. தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக அனைத்து தேவைகளையும் மக்கள் ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்ததால் அமேசானின் பங்கு 8 மாதத்தில் 80% அதிகரித்துள்ளது.

historic record,first person,$ 200 billion,property,world richest ,வரலாற்று சாதனை, முதல் நபர், 200 பில்லியன் டாலர், சொத்து, உலக பணக்காரர்கள்

அமேசான் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்ததால் பெசோஸின் சொத்து மதிப்பு 4.9 பில்லியன் டாலர்கள் உயர்ந்து 200 பில்லியன் டாலர்களைக் கடந்தது. அமேசான் தவிர பெசோஸ் வசம் ப்ளூ ஆரிஜின் என்கிற விண்வெளி ஆய்வு கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனமும், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் உள்ளன. இன்னும் சில தனியார் முதலீடுகளையும் செய்துள்ளார். இதனிடையே கடந்த புதன்கிழமை இந்த மதிப்பு 204.6 பில்லியன் டாலர்கள் என்ற நிலையில் இருந்தது.

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டக்ஸ் என்ற நிறுவனம், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பெசோஸின் சொத்து மதிப்பு 202 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 200 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த உலகின் முதல் நபராக உருவெடுத்து ஜெஃப் பெசோஸ் ஒரு புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.

Tags :