Advertisement

  • வீடு
  • வணிகம் or வர்த்தகம்
  • வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் பீட்டா பதிப்பு செயலிகளில் அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம் சோதனை

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் பீட்டா பதிப்பு செயலிகளில் அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம் சோதனை

By: Karunakaran Thu, 25 June 2020 8:15:25 PM

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் பீட்டா பதிப்பு செயலிகளில் அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம் சோதனை

வாட்ஸ்அப் செயலியில் அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சத்தை வழங்கும் சோதனையை அந்நிறுவனம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளில் துவங்கியுள்ளது. அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சத்தை வாட்ஸ்அப் வழங்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது

அதன்படி, வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா V2.20.194.7 பதிப்பிலும், வாட்ஸ்அப் ஐபோன் பீட்டா V2.20.70.26 வெர்ஷனில் இந்த புதிய அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. தற்போது, இந்த அம்சத்தின் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் எப்போது வெளியாகும் என எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

whatsapp android,ios beta,animated sticker,testing ,வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு,ஐஒஎஸ் பீட்டா,அனிமேட்டெட் ஸ்டிக்கர், சோதனை

பீட்டா பதிப்புகளில் சோதனை செய்யப்படும் இந்த அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம் தற்போது சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியிலும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள் சாட்களில் ஒருமுறை மட்டுமே அனிமேட் ஆகும் எனவும், இவை மீண்டும் அனிமேட் ஆக பயனர்கள் ஸ்கிரால் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் செயலி தனது முதல் ஸ்டிக்கர்களை இயக்குவதற்கான வசதியினை வழங்கியது. தற்போது வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டுள்ள ஸ்டிக்கர் அம்சம் மூலம் மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர்களை டவுன்லோட் செய்ய வேண்டும்

Tags :