Advertisement

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக்புக் ப்ரோ மாடல் அறிமுகம்!

By: Monisha Wed, 11 Nov 2020 6:30:50 PM

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக்புக் ப்ரோ மாடல் அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மேக்புக் ப்ரோ 13.3 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே, ஆப்பிள் எம்1 சிப், நியூரல் என்ஜின், ஆக்டிவ் கூலிங் சிஸ்டம் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

மேலும் இதில் ஸ்டூடியோ தர மைக்ரோபோன், தலைசிறந்த கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிக் சர் மற்றும் செக்யூர் என்கிளேவ் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இது மேக்புக் ப்ரோ மாடலை பாதுகாப்பானதாக மாற்றுகிறது.

apple,macbook pro,battery,connectivity,features ,ஆப்பிள்,மேக்புக் ப்ரோ,பேட்டரி,கனெக்டிவிட்டி,அம்சங்கள்

இவற்றுடன் அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான எஸ்எஸ்டி வசதி, தண்டர்போல்ட் / யுஎஸ்பி 4, டச் ஐடி, வைபை 6 போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 20 மணி நேர பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய மேக்புக் ப்ரோ மேஜிக் கீபோர்டு, டச் பார், முன்பை விட 11 மடங்கு அதிவேகமான மெஷின் லெர்னிங் திறன் கொண்டிருக்கிறது. மேம்பட்ட மேக்புக் ப்ரோ மாடல் விலை 1299 டாலர்கள் முதல் துவங்குகிறது.

Tags :
|