Advertisement

ஐபேட் ஏர் மாடலின் புதிய வெர்ஷனை உருவாக்கும் ஆப்பிள் நிறுவனம்!

By: Monisha Mon, 20 July 2020 5:24:08 PM

ஐபேட் ஏர் மாடலின் புதிய வெர்ஷனை உருவாக்கும் ஆப்பிள் நிறுவனம்!

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் ஏர் மாடலின் புதிய வெர்ஷன் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய ஐபேட் ஏர் வெர்ஷன் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஐபேட் ஏர் மாடல் இந்த ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது அதிநவீன தொழில்நுட்பத்தை குறைந்த விலையில் வழங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

2020 ஐபேட் ஏர் மாடல் 10.8 இன்ச் ஸ்கிரீன், ஏ13 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபேட் ஏர் விலை 500 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 37500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ipad air,new version,technology,apple ,ஐபேட் ஏர்,புதிய வெர்ஷன்,தொழில்நுட்பம்,ஆப்பிள் நிறுவனம்

முந்தைய தகவல்களின் படி ஐபேட் ஏர் 2020 மாடலில் லைட்னிங் போர்ட் நீக்கப்பட்டு யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த டேப்லெட் மாடலில் டச்ஐடி கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படுமா அல்லது முக அங்கீகார தொழில்நுட்பம் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

புதிய ஐபேட் ஏர் மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாடலுடன் 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் அடாப்டர் வழங்கப்படும் என தெரிகிறது.

Tags :