Advertisement

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 ஐ இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளது

By: Nagaraj Sat, 29 Oct 2022 6:51:48 PM

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 ஐ இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளது

நியூயார்க்: இந்தியாவில் உற்பத்தி... ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்-14 ஐ இந்தியாவில் தயாரிக்கத் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் அந்நிறுவனம் சீனாவிலிருந்து அதன் விநியோகச் சங்கிலியை மாற்றவுள்ளது.


ஆப்பிள் நிறுவனமானது தனது பெரும்பாலான தொலைபேசிகளை சீனாவில் தயாரிக்கிறது. ஆனால் வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருவதால் சில உற்பத்திகளை சீனாவுக்கு வெளியே மாற்றுவதற்கு அப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சீனாவில் பரவலான முடக்கத்தினை ஏற்படுத்திய பூச்சிய கொரோனா கொள்கைகள், அந்நாட்டின் வணிகங்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அப்பிள் நிறுவமானது, தனது புதிய ‘ஐபோன் 14’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

production,price,meaning,china,south korea,india ,
உற்பத்தி, விலை, அர்த்தம், சீனா, தென்கொரியா, இந்தியா

இந்த மேம்படுத்தப்பட்ட ஐபோன் 14 வகையை இந்தியாவில் தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆப்பிளின் பெரும்பாலான ஐ-போன்களை உற்பத்தி செய்யும் தைவானைத் தளமாகக் கொண்ட ஃபாக்ஸ்கான், 2017 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது, இந்நிலையிலேயே தனது உற்பத்தியை இந்தியாவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டு நிலவரப்படி, அப்பிள் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 4சதவீதமாகும். எனினும், இந்திய நவீன தொலைபேசிச் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் மிகவும் மலிவான தென் கொரிய மற்றும் சீன தொலைபேசிகளுடன் போட்டியிட முடியாது ஆப்பிள் நிறுவனமானது போராடி வருகிறது. இதேவேளை, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தமது உற்பத்திகளை ஆரம்பிப்பதால் அவற்றின் விலைகள் குறைவடையும் அல்லது மலிவான விலையில் கிடைக்கும் என அர்த்தமாகிவிடாது.

Tags :
|
|