Advertisement

  • வீடு
  • வணிகம் or வர்த்தகம்
  • ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் மாடல் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் மாடல் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது!

By: Monisha Sat, 19 Dec 2020 1:51:22 PM

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் மாடல் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது!

ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் மாடல் 2021 ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது ஆப்பிள் நிறுவனம் 2019 ஆண்டு அறிமுகம் செய்த ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் விலை குறைந்த மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

புதிய லைட் வெர்ஷனில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் மாடல் விலை முந்தைய ஏர்பாட்ஸ் ப்ரோவை விட 20 சதவீதம் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

apple,airbots,pro lite,active noise,sales ,ஆப்பிள் நிறுவனம்,ஏர்பாட்ஸ்,ப்ரோ லைட்,ஆக்டிவ் நாய்ஸ்,விற்பனை

ஆப்பிள் நிறுவனம் லைட் வேரியண்ட்டை ஏர்பாட்ஸ் ப்ரோ விற்பனை துவங்கியதும் விற்பனைக்கு வழங்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஏர்பாட்ஸ் ப்ரோ விற்பனையில் அமோக வரவேற்பை பெற்றதே இதற்கு முக்கிய காரணம்..

ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் உற்பத்தி அடுத்த ஆண்டு துவங்கும் என கூறப்படுகிறது. தோற்றத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் முந்தைய ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இது அக்டோபர் 2019 வாக்கில் ரூ. 24,900 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

Tags :
|