Advertisement

பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மீண்டும் காய்கறிகளின் விலை அதிகரிப்பு

By: vaithegi Thu, 28 Sept 2023 5:20:32 PM

பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மீண்டும் காய்கறிகளின் விலை அதிகரிப்பு

சென்னை: காய்கறிகளின் விலை மீண்டும் உயர்வு .. தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணத்தினால் தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மொத்தமாக குறைந்து உள்ளது. ஆனால், பருவமழையால் இஞ்சி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் கொள்முதல் இல்லாமல் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில் இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் இஞ்சி, வெங்காயம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ. 34 க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.70 க்கும், பச்சை மிளகாய் ரூ. 40 க்கும், உருளைக்கிழங்கு ரூ. 30 க்கும், பீட்ரூட் ரூ. 20 க்கும், நெல்லிக்காய் ரூ. 89 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

price of vegetables,monsoon ,காய்கறிகளின் விலை ,பருவமழை

இதற்கு அடுத்ததாக, குடைமிளகாய் ரூ.35 க்கும், பாகற்காய் ரூ. 20 க்கும், சுரைக்காய் ரூ. 20 க்கும், பட்டர் பீன்ஸ் ரூ. 90 க்கும், அவரைக்காய் ரூ. 45 க்கும், முட்டைக்கோஸ் ரூ. 15 க்கும், கேரட் ரூ. 30 க்கும், கொத்தவரை ரூ. 25 க்கும்,

மேலும் வெள்ளரிக்காய் ரூ. 15 க்கும், முருங்கைக்காய் ரூ. 30 க்கும், கத்தரிக்காய் ரூ. 30 க்கும், பெரிய கத்தரிக்காய் ரூ. 50 க்கும், பீன்ஸ் ரூ.60க்கும், இஞ்சி ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :