Advertisement

  • வீடு
  • வணிகம் or வர்த்தகம்
  • தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை

தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை

By: vaithegi Sun, 27 Aug 2023 11:14:54 AM

தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை

சென்னை: உள்நாட்டில் பங்கு சந்தையில் ஏற்படும் ஏற்றுமதி, இறக்குமதி ஆகிவற்றைப் பொருத்து தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த வகையில், கடந்த வாரம் முழுவதுமே ஆடிப்பெருக்கு, வரலட்சுமி நோன்பு போன்ற முக்கிய பண்டிகைகளை தொடர்ந்து தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் குறைந்து வந்தது.

அதாவது, நேற்று சென்னை 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.5950க்கும், சவரனுக்கு ரூபாய் 40 உயர்ந்து ரூ. 47,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோன்று, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.5480 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.43,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

gold prices,festivals,exports , தங்கத்தின் விலை, பண்டிகை,ஏற்றுமதி

இதனைத் தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த வித மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதைப் போன்று, நேற்று சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 80க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றும் எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ. 80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :