Advertisement

இன்று குறைந்தது தங்கம்

By: vaithegi Wed, 25 Oct 2023 1:22:31 PM

இன்று குறைந்தது தங்கம்

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டே வருகிறது. கடந்த 21ஆம் தேதி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து 1 சவரன் தங்கம் ரூ.45,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ரூ.5,670-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280க்கு விற்பனையானது. அதேபோன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,660க்கு விற்பனையானது.

gold,sale ,தங்கம்,விற்பனை

நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 அதிகரித்து ள்ளது. எனவே இதன் மூலம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 45,400க்கு விற்பனையாகிறது. மேலும் அத்துடன் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.15 அதிகரித்து, ரூ. 5,675க்கும் விற்பனையாகிறது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது. கிராம் ஒன்றிற்கு ரூ. 20 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் 5,655க்கும் , 1 சவரன் 45,240க்கும் விற்பனையாகிறது.

Tags :
|