Advertisement

தற்போது மது விற்பனை குறைந்துள்ளது

By: vaithegi Sun, 19 Nov 2023 1:34:56 PM

தற்போது  மது விற்பனை குறைந்துள்ளது


சென்னை: தமிழகத்தில் பலரும் ஐயப்பனுக்கு மாலை போட துவங்கியுள்ள நிலையில் மது விற்பனை கடும் சரிவு ... தமிழகத்தில் பொதுவாக பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்களில் அதிகமாக மது விற்பனை நடைபெறுகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகைக்கு நாளொன்றுக்கே பல கோடி வியாபாரம் நடந்தது.

இந்நிஹ லையில், தற்போது கார்த்திகை மாதம் துவங்கியுள்ள நிலையில் பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை போட துவங்கிவிட்டனர்.

alcohol,sales,devotees , மது ,விற்பனை ,பக்தர்கள்

இதனால், மது விற்பனை சரிந்து உள்ளது.இதனை அடுத்து பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் வரைக்கும் கிட்டத்தட்ட 2 மாதங்கள் வரைக்கும் மது விற்பனை பெரிதளவில் இருக்காது.

அதிலும், குறிப்பாக நகரங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் தான் அதிகளவிலான பக்தர்கள் மாலை போடுவதால் கிராமங்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை மிகவும் வீழ்ச்சியடைய வாய்ப்பு உள்ளது. அதாவது, கார்த்திகை மாதங்களில் 10% முதல் 20% வரையிலும் மது விற்பனை குறையலாம் என டாஸ்மாக் கடை ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.

Tags :
|