Advertisement

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு .. பெட்ரோல் ரூ.102.63க்கு விற்பனை

By: vaithegi Thu, 28 Sept 2023 1:04:19 PM

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு ..  பெட்ரோல் ரூ.102.63க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை ...இந்தியாவில் கச்சா எண்ணையின் விலை மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை பொறுத்து பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலந்த 2021 ஆம் ஆண்டு திடீரென பெட்ரோல், டீசலின் விலை உயர்த்தப்பட்டு பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 110.85 க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 102.59 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதன் பின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி அடிப்படையில் விலை குறைக்கப்பட்டு தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102. 63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

sale,diesel,petrol ,விற்பனை,டீசல் ,பெட்ரோல்

மேலும், இந்தியாவில் கடந்த 1 ஆண்டுகளுக்கும் மேலாக பெட்ரோல், டீசலின் விலை உயராமலிருந்து வரும் நிலையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 95 டாலர் வரை விலையேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும், இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசலின் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை எனவும் ஒரு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் 495வது நாளாக பெட்ரோல், டீசலின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|
|